தினமலர்
Sign Up

Advertisement

Dinamalar Logo
Districts

மாவட்ட செய்திகள்

வியாழன், மார்ச் 28, 2024,பங்குனி 15, சோபகிருது வருடம்


Advertisement

ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் இறுதி கட்டத்தில் திட்ட அறிக்கை தயாரிப்பு பணி

ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் இறுதி கட்டத்தில் திட்ட அறிக்கை தயாரிப்பு பணி


UPDATED : பிப் 09, 2021 07:00 AM

ADDED : பிப் 09, 2021 06:19 AM

ShareTweetShareShare
3

UPDATED : பிப் 09, 2021 07:00 AM ADDED : பிப் 09, 2021 06:19 AM


3
Latest Tamil News

சென்னை விமான நிலையம் -- வண்டலுார் கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில், பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில், மெட்ரோ ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது.தற்போது, விமான நிலையம் -- வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை -- சென்ட்ரல் வரை இரண்டு வழித்தடங்களில், போக்குவரத்து நடந்து வருகிறது.இதில், முதல் நீட்டிப்பாக, வண்ணாரப்பேட்டை -- திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான வழித்தடம், விரைவில் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி, இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தை துவக்கி வைக்க இருக்கிறார்.ஒப்புதல்இந்நிலையில், மாதவரம் -- சோழிங்கநல்லுார், மாதவரம் -- சிறுசேரி, பூந்தமல்லி -- கலங்கரை விளக்கம் ஆகிய வழித்தடங்களில், இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த, கட்டுமான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன.விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை, தாம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர். இதற்கிடையே, வண்டலுார் அடுத்த, கிளாம்பாக்கத்தில், புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள், விரைவில் இந்த நிலையத்தில் இருந்து தான் இயக்கப்பட உள்ளன.இதனால், பயணியரின் கோரிக்கையை ஏற்று, விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து நிலையம் வரை, மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க, தமிழக அரசு, 2018ல் ஒப்புதல் வழங்கியது.விமான நிலையம் -- கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தடத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டது. தனியார் கட்டுமான நிறுவனம் வாயிலாக தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில், மூன்று வழித்தடங்கள் பரிந்துரைக்கப்பட்டன.இதில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி மேம்பால முறையில் இந்த நீட்டிப்பை செயல்படுத்த, மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்தது. இதற்கான நிலங்கள் தேர்வு, மண் பரிசோதனை பணிகள், 2020 ஜன., பிப்., மாதங்களில் மேற்கொள்ளப்பட்டன.இதன் பின், இத்திட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என, கூறப்படுகிறது.நிர்வாகம் பதில்இது குறித்து, சிட்லபாக்கம், கார்த்திக் அவென்யூவைச் சேர்ந்த தயானந்த் கூறியதாவது:கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தில், பல மாதங்களாக எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது குறித்து, முதல்வரின் தனிப்பிரிவு, மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு கடிதம் எழுதினோம்.இதற்கு, மெட்ரோ ரயில் நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதில், சாத்தியக்கூறு அறிக்கை அடிப்படையில், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது என, குறிப்பிடப்பட்டுஉள்ளது.
இத்திட்டத்தில், விரைவில் ஏதாவது முன்னேற்றம் ஏற்படும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.14 இடங்களில் நிலையங்கள்விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே, மெட்ரோ ரயில் பாதை முழுவதும் மேம்பால முறையில், 15.03 கி.மீ., தொலைவுக்கு அமைக்கப்பட உள்ளது. அருமலை சாவடி, பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி காலனி, திரு.வி.க.,நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்காரணை, பெருங்களத்துார், ஆர்.எம்.கே., நகர், வண்டலுார், வண்டலுார் உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் ஆகிய ரயில் நிலையங்கள் அமைய உள்ளது.
மேம்பாலங்களால் பிரச்னை இல்லைவிமான நிலையம் -- கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டியே அமைய உள்ளது. சில இடங்களில், புறநகர் மின்சார ரயில் பாதையை ஒட்டி செல்லும்.இது குறித்து, போக்குவரத்து தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறியதாவது:இந்த வழித்தடத்தில், நெடுஞ்சாலைத் துறையால், ஒன்பது இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. அதே நேரத்தில், விமான நிலையம் -- செங்கல்பட்டு உயர் மட்ட சாலை திட்டமும், இறுதிகட்ட ஒப்புதலுக்கு காத்திருக்கிறது.எனவே, தற்போது மேம்பாலங்களை கருத்தில் கொண்டு, தரையில் இருந்து, 46 அடி உயரத்தில், மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதனால், மேம்பாலத்தில் தடையற்ற போக்குவரத்து உறுதி செய்யப்படும்.இதற்கு மேல், 70 அடி உயரத்தில் உயர்மட்ட சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த, நெடுஞ்சாலைத்துறை ஒப்புக் கொண்டுஉள்ளது. முதல்கட்டமாக, ஜி.எஸ்.டி., சாலைக்கு இடது புறமாக, விமான நிலையம் -- இரும்புலியூர் வரை, இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தமிழக அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Topics :
பொது

Advertisement

Advertisement

Advertisement

வாசகர்கள் கருத்துகள் ( 3 )




K.ANBARASAN
K.ANBARASANபிப் 15, 2021 09:55

உத்தர பிரதேஷத்தில் நான்கு மெட்ரோ பிஹாரில் இரெண்டு மெட்ரோ மஹாராஷ்டிராவில் மூன்று மெட்ரோ ரயில் நிலையங்கள் உருவாக்கம் ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு மெட்ரோ நிலையத்தை வைத்து கொண்டு இவ்வளவு பில்ட் அப் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்


அருமை. இது வந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும். தாம்பரம் தாண்டி தெற்கில் நல்ல வளர்ச்சி இருக்கும். கிளம்பாக்கம் பேருந்து நிலையமும் வந்து விட்டால் தாம்பரம், செங்கல்பட்டு ஏரியா மிகச்சிறப்பாக இருக்கும்.


Arul Narayananபிப் 09, 2021 09:46

Along the GST road sub urban railway is existing. Why to congest the road further? Moreover it is needed for expressway also. Proposal would be better if metro passes on a route west to Pallavaram like Pammal and other sub urban areas avoiding congestion and development of new areas.



K.ANBARASAN
K.ANBARASANபிப் 15, 2021 09:55

உத்தர பிரதேஷத்தில் நான்கு மெட்ரோ பிஹாரில் இரெண்டு மெட்ரோ மஹாராஷ்டிராவில் மூன்று மெட்ரோ ரயில் நிலையங்கள் உருவாக்கம் ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு மெட்ரோ நிலையத்தை வைத்து கொண்டு இவ்வளவு பில்ட் அப் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்


Rajagopalபிப் 10, 2021 13:25

அருமை. இது வந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும். தாம்பரம் தாண்டி தெற்கில் நல்ல வளர்ச்சி இருக்கும். கிளம்பாக்கம் பேருந்து நிலையமும் வந்து விட்டால் தாம்பரம், செங்கல்பட்டு ஏரியா மிகச்சிறப்பாக இருக்கும்.


Arul Narayananபிப் 09, 2021 09:46

Along the GST road sub urban railway is existing. Why to congest the road further? Moreover it is needed for expressway also. Proposal would be better if metro passes on a route west to Pallavaram like Pammal and other sub urban areas avoiding congestion and development of new areas.


Advertisement


Follow us

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us